×

ஒன்றிய அரசிடம் பிச்சை கேட்கவில்லை; உரிமையை கேட்கின்றோம்: அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசிடம் பிச்சை கேட்கவில்லை; உரிமையை கேட்கின்றோம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறுகிய மனப்பான்மை கொண்ட ஒன்றிய அரசுக்கு உரிய பாடம் புகட்டப்படும். ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவே குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது ஒன்றிய அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசிடம் பிச்சை கேட்கவில்லை; உரிமையை கேட்கின்றோம்: அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Minister ,I. Peryasamy ,Chennai ,Minister of Rural Development ,Union Government ,Peryasami ,EU ,Union Party Government ,I. Peryasami ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...