×

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது போல போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது. முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருக்க கூடிய 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரே பெயரில் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றியதாக பணியாற்றியதாக நேற்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் அண்ணாபல்கலைகழக துணை வேர்ந்தர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தபோது; அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இருக்க கூடிய இணைகல்லூரிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உண்மைதான். அதற்காக முறைகேடுகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

189 பேராசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, ஒரே பேராசிரியர் தன்னுடைய ஆதார் எண்ணை மாற்றி சுமார் 32 கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்து அதன்மூலம் வருவார் ஈட்டியுள்ளார். மொத்தமாக 50 கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார். சம்பந்தபட்ட கல்லூரிகள் மீது, பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கப்படும் என அவர் கூறினார்.

The post அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு: துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice ,Velraj Petty ,Chennai ,Velraj ,Arrabor ,Vice-Chancellor ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு பாடத்திட்டம் குறித்த...