×

மேகதாதுவில் அணை கட்ட இதுவரை எநத அனுமதியும் வழங்கப்படவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

டெல்லி: காவிரி ஆற்றின் குறுகே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தொடந்து தமிழக அரசு சட்டபோராட்டம் மூலம் இதனை எதிர்த்து வருகிறது. மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாடு தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் சட்டபோராட்டம் நடத்தி, காவிரி ஆற்றின் குறுகே மேகதாது அணையானது கட்ட முடியாதும், கட்ட கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், காவிரி ஆணையத்தின் தீர்ப்பின் படியும் தமிழ்நாடு அரசின் அனுமதியில்லாமல் எந்தவித அணையும் கட்ட முடியாது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றூம் நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுகே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய நிர்வள ஆணையத்திற்கு தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வள ஆணையம், காவிரி ஆற்றின் குறுகே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் இதுவரை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசு அனுமதியின்றி எந்தவித அணையும் கட்ட முடியாது என்பதை உச்சநீதிமன்றமும், காவிரி ஆணையமும் உறுதி செய்துள்ளது. அதேபோல் தற்போது வரை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என மத்திய நீர்வளஆணையம் தகவளறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது.

The post மேகதாதுவில் அணை கட்ட இதுவரை எநத அனுமதியும் வழங்கப்படவில்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Union government ,Delhi ,Karnataka government ,Cauvery ,Tamil Nadu government ,Tamil Nadu ,Cauvery Commission ,Dinakaran ,
× RELATED மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம்,...