×

பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு: சவரன் ரூ.52,000க்கும் கீழ் சென்றது; இல்லத்தரசிகள் ஹாப்பி!!

சென்னை: பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிந்து சவரன் ரூ.52,000த்திற்கும் கீழ் சென்றது. இந்த விலை குறைப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. பட்ஜெட் அறிவிப்பு ஒரு பக்கம் என்றால் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையிலும் அது எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நேற்று மாலை ஒரு சவரனுக்கு 2,200 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் தங்கம் 52,400க்கு விற்பனையானது . அதுபோல ஒரு கிராம் தங்கம் விலை ரூ.275 குறைந்து ரூ.6550க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.51,920க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 60 குறைந்து ரூ. 6,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் -குறைந்து ரூ.92-க்கு விற்பனையாகிறது.வேகமாக உயர்ந்து வந்த தங்கம் விலை திடீரென ஒரே நாளில் சவரனுக்கு ரூ.52,000க்கும் கீழ் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை 2-வது-நாளாக சரிவு: சவரன் ரூ.52,000க்கும் கீழ் சென்றது; இல்லத்தரசிகள் ஹாப்பி!! appeared first on Dinakaran.

Tags : Shavran ,Chennai ,EU ,Housewives ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து பெண்ணிடம் 25 சவரன் நகை கொள்ளை..!!