×

பொற்பனைக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பொற்பனைக்கோட்டையில் சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு 18.06.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள் (glass beads), மாவுக் கல் மணிகள் (soap stone beads), பளிங்கு கல் மணிகள் (Crystal beads), உட்பட 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று இரண்டு சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி (Amethyst) ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன.

சங்ககாலம் என்கிற தொடக்க வரலாற்றுக் கால தொல்லியல் தளங்களான அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், கீழடி, கொற்கை போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. சூதுபவளம் மற்றும் அகேட் கல்மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கிடைக்கின்றன. அண்மையில் செம்பு ஆணிகளும் கண்ணிற்கு மை தீட்டும் அஞ்சணக்கோல் கிடைத்துள்ள நிலையில் இன்று சூதுபவள மணிகளும் அகேட் வகை மணிகளும் கிடைத்துள்ளது சிறப்பாகும். பொற்பனைக்கோட்டையின் பண்பாட்டுச் செழுமையை உறுதிசெய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பொற்பனைக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Polpanaikot ,Pudukottai ,Polpanaikottai ,Minister ,Thangam Thanarasu ,Dinakaran ,
× RELATED பொற்பனைகோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில்...