×

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொழிற்சாலைக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 5 ஆண்டுகளில் ரூ.9,000 கோடி முதலீட்டில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.

The post ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ் appeared first on Dinakaran.

Tags : Tata Motors ,Ranipetta ,Chennai ,Tata Motors Company ,Ranipettai district ,Tata ,Jaguar Land Rover ,Chief Minister MLA ,K. Stalin ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி...