- மேற்கு மண்டலம் IG
- சென்னிமலை போலீஸ்
- நிலையம்
- சென்னிமலை
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி
- பவனேஸ்வரி
- சென்னிமலை காவல் நிலையம்
- கோயம்புத்தூர்
- மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி
- பவனீஸ்வரி
- தின மலர்
சென்னிமலை, ஜூலை 24: சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பவானீஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பவானீஸ்வரி நேற்று சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகளை ஐ.ஜி பவானீஸ்வரி பார்வையிட்டு சுமார் ஒரு மணி நேரம் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சென்னிமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை பிடிப்பதற்கு போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என போலீசாருக்கு ஐ.ஜி பவானீஸ்வரி அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஈரோடு எஸ்பி ஜவகர், பெருந்துறை டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன், சென்னிமலை இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் மேற்கு மண்டல ஐஜி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.