×

ஆவுடையார்கோவில் அருகே அரசு கல்லூரி கவுர விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

அறந்தாங்கி, ஜூலை 24: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தமிழ் துறை பேராசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கணேஷ் குமார் தலைமை வகித்தார்.

ஆர்பாட்டத்தில் 3 மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக மாநில குழு பரிந்துரை மற்றும் உயர்நீதிமன்ற ஆணையின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும். நீண்ட காலமாக கல்வித் தகுதியோடு பணிபுரிந்து கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

The post ஆவுடையார்கோவில் அருகே அரசு கல்லூரி கவுர விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government College ,Auduyarkovil ,Aranthangi ,Government College of Arts and Sciences ,Perunavallur ,Avudaiyarkovil ,Pudukottai ,Ganesh Kumar ,College ,Dinakaran ,
× RELATED ஆவுடையார்கோவில் அருகே விளாங்காட்டூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்