- வேலூர்
- திருவண்ணாமலை ரயில்வே
- வேலூர் டிராவல்ஸ்
- திருச்சி கோட்டா ரயில்வே பாதுகாப்பு படையினர்
- வேலூர், திருவண்ணாமலை
- திருவண்ணாமலை இரயில்வே
- படை
- தின மலர்
வேலூர், ஜூலை 24: கள்ளச்சந்தையில் இ-டிக்கட் விற்ற வேலூர் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப்படையினர் சீல் வைத்தனர். வேலூர், திருவண்ணாமலையில் போலியான சாப்ட்வேரை பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் இ-டிக்கட் முன்பதிவு செய்து விற்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஐஆர்பிஎப்எஸ் அதிகாரி அபிஷேக் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப்படையினர் வேலூர் சைதாப்பேட்டை லத்தீப் பாஷா தெருவில் இயங்கி வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் 1 இ-டிக்கட், 13 காலாவதியான இ-டிக்கட்டுகள் மற்றும் கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு 45 வயதான டிராவல்ஸ் உரிமையாளரை ரயில்வே பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது சொந்த ஐடியை பயன்படுத்தி போலியான நெக்ஸஸ் சாப்ட்வேர் மூலம் இ டிக்கட்டுகளை முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரயில்வே பாதுகாப்புப்படையினர் சீல் வைத்தனர். அதேபோல் திருவண்ணாமலையிலும் போலியான சாப்ட்வேரை பயன்படுத்தி ரயில்வே இ டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விற்ற 2 டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் சீல் வைத்தனர்.
The post கள்ளச்சந்தையில் இ-டிக்கட் விற்ற டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சீல் திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப்படை அதிரடி வேலூரில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தி appeared first on Dinakaran.