×

தென்காசி கலெக்டர் ஆபீசில் மாரடைப்பால் பிடிஓ சாவு

தென்காசி, ஜூலை 24: தென்காசி மாவட்டம், கடையம் பாரதி நினைவு நகரை சேர்ந்தவர் திலகராஜ் (52). தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை அலுவலகத்தில் கடந்த 7 மாதங்களாக பிடிஓவாக பணியாற்றி வந்த இவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள். வழக்கம்போல் தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை அலுவலகத்திற்கு நேற்று பணிக்கு சென்ற திலகராஜ், மாலை 6.30 மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தனது ஜீப் டிரைவரிடம் கூறினார். இதையடுத்து அவரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திலகராஜ் இறந்து விட்டார். மாரடைப்பால் அவர் உயிரிழந்த சம்பவம் தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தென்காசி கலெக்டர் ஆபீசில் மாரடைப்பால் பிடிஓ சாவு appeared first on Dinakaran.

Tags : PTO ,Tenkasi ,collector ,Thilakaraj ,Kadayam Bharathi Memorial Town, Tenkasi district ,Tenkasi Collector's Office ,Dinakaran ,
× RELATED பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல்...