- அமைச்சர் திட்டம்
- Karimangalam
- கரிமங்கலம் ஒன்றியம்
- பொம்மல்லி பஞ்சாயத்து
- பொம்மல்லி
- முக்குளம்
- கேத்தநல்லி
- நாகணம்பட்டி
- பஞ்சாயத்து கவுன்சில்
- ஜனாதிபதிகள்
- தீர்த்தகிரி
- காஞ்சனா கண்ணப்பெருமாள்
- உடன் முதல்வர் திட்ட முகாம்
காரிமங்கலம், ஜூலை 24: காரிமங்கலம் ஒன்றியம், பொம்மஅள்ளி ஊராட்சியில் பொம்மஅள்ளி, முக்குளம், கேத்தனஅள்ளி, நாகனம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தீர்த்தகிரி, காஞ்சனா கண்ணபெருமாள், ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் பிடிஓக்கள் கணேசன், நீலமேகம், மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அருண் பிரசாத், பொறியாளர் ரமேஷ், துணை பிடிஓக்கள் சரளா, கிருத்திகா ஊராட்சி செயலாளர்கள் பச்சியப்பன், மூர்த்தி, சோலை, விஏஓ சிவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.