×

மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மின்சார கட்டண உயர்வு கண்டித்து நேற்று காலையில் சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்டம் வடசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தியேட்டர் அருகிலும், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தின் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ந.பாலகங்கா தலைமையில் தங்கசாலை மணிக்கூண்டு அருகிலும், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகிலும், தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி சிலை அருகிலும், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகிலும், வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் கொளத்தூரில் அண்ணாசிலை அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் எம்.ஜி.ஆர். நகரிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

The post மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai district ,Vannarpet ,Krishna Theatre ,District Secretary ,Minister ,Jayakumar ,Northern District North Chennai ,Condeman ,Dinakaran ,
× RELATED சென்னை மாவட்டத்தில் வீட்டில் நூலகம்...