- ஒலிம்பிக் கால்பந்து
- பாரிஸ்
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டி
- ஒலிம்பிக் விளையாட்டுகள்
- பிரான்ஸ்
- ஒலிம்பிக்
- தின மலர்
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரமாண்ட தொடக்கவிழா ஜூலை 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் நாளிலேயே அர்ஜென்டினா, ஸ்பெயின் போன்ற பிரபல அணிகள் களமிறங்குவதால் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஹேண்ட்பால், வில்வித்தை போட்டிகள் நாளை முதல் நடக்க உள்ளன.
* 17 வயதில்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் மிக இளம் வயது கால்பந்து வீரர் என்ற பெருமை ஸ்பெயின் அணியின் பாவ் குபார்ஸிக்கு (17 வயது) கிடைத்துள்ளது. இவர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
The post ஒலிம்பிக் கால்பந்து இன்று தொடக்கம் appeared first on Dinakaran.