×
Saravana Stores

தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுபோல அமைந்துள்ள பட்ஜெட் இது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுபோல அமைந்துள்ள பட்ஜெட் இது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை முழுமையான ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்துக்கு எதிரானது. பேரிடர் நிவாரணமாக ரூ.37,000 கோடியை வழங்க வேண்டும் என்று விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்பித்தது. தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்துக்கு ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுபோல அமைந்துள்ள பட்ஜெட் இது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Union Government ,India ,Tamil Nadu ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...