- மோடி
- ராகுல் காந்தி
- தில்லி
- யூனியன் பட்ஜெட்
- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- ராகுல் காந்தி சாட்டால்
- தின மலர்
டெல்லி : ஒன்றிய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 2024-2025ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, “மோடி அரசு பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே பட்ஜெய் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கட், காப்பி, பேஸ்ட் செய்த பட்ஜெட். மற்ற மாநில மக்களின் நலன்களை சமரசம் செய்து, புறந்தள்ளி கூட்டாளிகளின் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு தரும் நிதியை கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை; அம்பானி, அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட்,” என்றார்.
The post மோடி நாற்காலியை காப்பாற்றி கொள்ளும் பட்ஜெட்.. சாதாரண குடி மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை : ராகுல் காந்தி சாடல் appeared first on Dinakaran.