டெல்லி: நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஒன்றிய பட்ஜெட் ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஒன்றிய பட்ஜெட் ஏற்படுத்தி இருக்கிறது. மக்களுக்கான வரி நடைமுறைகள் பட்ஜெட்டில் எளிமையாக்கப்பட்டுள்ளன. மூல ஆதாயங்களுக்காகவும் வரி விதிப்பு விதிப்பு அணுகுமுறையை எளிமைப்படுத்த விரும்பினோம். உண்மையான சராசரி வரி விதிப்பு குறைந்துள்ளது; பங்குச் சந்தை முதலீடுகளை பட்ஜெட் ஊக்குவிக்கிறது
The post நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஒன்றிய பட்ஜெட் ஏற்படுத்தி இருக்கிறது: நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.