- பீகார், ஆந்திரா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- தில்லி
- நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- யூனியன் பட்ஜெட்
- பீகார்
- உத்தரகண்ட்
- சிக்கிம்
- ஹிமாச்சல்…
டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பீகார், உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சல் மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ளத் தடுப்புக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வாசகமே இடம்பெறவில்லை.
ஏற்கனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முதல்வர் வலியுறுத்தி இருந்தார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்துக்கான ஒப்புதல் வழங்க முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை.
வழக்கமாக பட்ஜெட் உரையில் இடம்பெறும் திருக்குறள், சங்க இலக்கிய மேற்கோள் கூட பட்ஜெட்டில் இம்முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்காததற்கு நாடாளுமன்றத்தில் கண்டனம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். மோடி அரசை காப்பாற்றிக் கொள்ள பீகார், ஆந்திராவுக்கும் பட்ஜெட்டில் அறிவிப்புகளை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளதாக குற்றம் சாடியுள்ளனர்.
The post நிதி மழையில் பீகார், ஆந்திரா: பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற சொல்லே இடம்பெறவில்லை; திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.