×
Saravana Stores

முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு

டெல்லி: முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். MSMEகள் தங்கள் மன அழுத்த காலத்தில் வங்கிக் கடனைத் தொடர வசதியாக புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வென்ற பாஜக, கூட்டணியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

அதில் முத்ரா கடன் உதவி திட்டம் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தின் படி 3 பிரிவுகளாக கடனுதவி அளிக்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் வரையிலும் கிஷோர் என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 5 லட்சம் வரையிலும் தருண் என்ற பெயரில் ரூ 5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

TREDS பிளாட்ஃபார்மில் கட்டாயமாக நுழைவதற்கு வாங்குபவர்களின் விற்றுமுதல் வரம்பு ரூ. 500 கோடியிலிருந்து ரூ.250 கோடியாக குறைக்கப்படும். MSME துறையில் 50 பல தயாரிப்பு உணவு கதிர்வீச்சு அலகுகளுக்கு நிதி உதவி MSMES மற்றும் பாரம்பரிய கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் விற்க PPP முறையில் E-Commerce Export Hbs அமைக்கப்படும். யூனியன் பட்ஜெட் 2024-25 எம்எஸ்எம்இகள் மற்றும் உற்பத்தி, குறிப்பாக உழைப்பு மிகுந்த உற்பத்திக்கு சிறப்பு கவனம் அளிக்கிறது.

The post முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mudra ,Delhi ,Finance Minister ,Nirmala Sitharaman ,Parliament ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பட்டாசு தடை வழக்கு மாசு...