×

ஊரப்பாக்கத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

சென்னை ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து நல்லம்பாக்கம் வரையிலான 12.4 கி.மீ தூர சாலையை ரூ.5 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி. சாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கடக்க மாற்று சாலையாக இது அமையும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை தடையால் 25 ஆண்டுகள் இச்சாலை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது உரிய அனுமதி பெற்று சாலை சீரமைக்கப்பட உள்ளது.

பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இச்சாலை மாநில ஊரக நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதில் காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரையில் 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை உள்ள 300 மீட்டர் சாலையும், நல்லம்பாக்கம் முதல் நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரை 2 கிலோ மீட்டர் சாலையும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் மற்றும் ஊனமாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதனால் ஊரப்பாக்கத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி. சாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கடக்க மாற்று சாலையாக இது அமையும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளனர்

The post ஊரப்பாக்கத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,D. Mo. Anparasan ,Urpakkam ,Chennai ,Urappakkam ,GST ,Thamo Anparasan ,Nallampakkam ,Klambakkam ,Oorpakkam ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மாணவரணி...