சென்னை: வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்; கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது.
வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக திமுக அரசு உயர்த்தியது. 40944 புதிய உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர். பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219ஆக உயர்ந்துள்ளது. வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரித்துள்ளது. வணிகர் நல வாரியத்தின் மூலம் வணிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுக்காக ரூ .3.29 கோடி நிதி வழங்கியுள்ளோம்.
நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை அல்லது 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10000 வழங்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளுக்கான குத்தகை காலம் 12 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள கடைகளின் குத்தகை காலம் உயர்த்தப்படும். வணிகர் நலவாரிய உறுப்பினர்கள் மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தீ விபத்து மற்றும் இதயநோய், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. சேவை மனப்பான்மையோடு வணிகர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
The post வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.