×
Saravana Stores

பொது இன்சூரன்ஸ் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் : சு.வெங்கடேசன் எம்பி கருத்து

டெல்லி : பொது இன்சூரன்ஸ் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு 01.08.2022 இல் நிலுவையாகி இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும் அங்கு ஊதியம் மாற்றம் செய்யப்படவில்லையே! மேலும் 2023 – 24 ல் முந்தைய ஆண்டின் நிலைமையை மாற்றி லாபகரமான சேவையை உறுதி செய்துள்ள பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தாமதமாவது ஏன் என்ற கேள்வியை (எண் 79/22.07.2024) எழுப்பி இருந்தேன்.

அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சரே இணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ 3529 கோடிகள் நட்டம் இன்று இருந்த நிலைமை மாற்றப்பட்டு 2023 24 இல் ரூ 7588 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறி உள்ளன என்பதை தனது பதிலிலும் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான பேச்சு வார்த்தைகள் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சங்கம் (GIPSA) மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம்/பேச்சு வார்த்தை வாயிலாக நடைபெற்று தீர்வு காணப்படுவது நடைமுறை என தெரிவித்துள்ளார். அரசிற்கு இதுவரை அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சங்கம் (GIPSA) இடமிருந்து முன்மொழிவு ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் எம்.பி கருத்து

லாபகரமாக அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்குகிற நிலையில், இதுல நிதி நிறுவனங்களில் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு விட்ட சூழலில், அரசு பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தாமதமாவது நியாயமல்ல, உடனடியாக அதற்கான பேச்சுவார்த்தைகளை அங்குள்ள தொழிற்சங்கங்களுடன் துவக்கி தீர்வு காண அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சங்கத்திற்கு அமைச்சகம் அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொது இன்சூரன்ஸ் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் : சு.வெங்கடேசன் எம்பி கருத்து appeared first on Dinakaran.

Tags : Shu ,Venkatesan MB ,Delhi ,Dinakaran ,
× RELATED தமிழ் கல்வெட்டுகளை மீண்டும்...