×

ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூலை 23: ஊராட்சி மன்றங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத்தலைவர் வீரையா தலைமை தாங்கினார். சிஐடியு பொதுச்செயலர் சேதுராமன், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க பொதுச் செயலர்கள் முருகானந்தம், சையது முகமது, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள் உமாநாத், வேங்கையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் சேவியர், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், அண்ணாத்துரை, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி மன்றங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Collector's Office of the Municipal, Rural Development and Internal Administration ,CIDU ,Associations of ,Sivaganga District Municipality, Rural Development and Internal Administration ,CID ,
× RELATED சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை...