- நரிகுருவர்
- தேசிய பெண் குழந்தை தினம்
- பெரம்பலூர்
- மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை
- பெரம்பலூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை
பெரம்பலூர், ஜூலை 23: பெரம்பலூரில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவிக ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான 18 வயதிற்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து மற்றும் கபடிப் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் 11 பள்ளிகளைச் சேர்ந்த கபடி அணியும், 7 பள்ளிகளைச் சேர்ந்த கால்பந்து அணியும் கலந்துகொண்டன. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூகநல அலுவலர் ஜெய தலைமைவகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கி ணைப்பாளர் பிரபு கிருஷ்ணா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி கீதா ஆகியோர் பேசினர்.
கபடிபோட்டியில் துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் பரிசும், கொளக்கா நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசும், குன்னம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மூன்றாம் பரிசும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி நான்காம் பரிசும் வென்றன. கால்பந்து போட்டியில் அனுக்கூர் அரசுமேல் நிலைப்பள்ளி முதல் பரிசும், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசும், பெரம்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளி நான்காம் பரிசும் வென்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை மாவட்ட மகளிர் அதிகார மையப் பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.
The post தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கலெக்டரிடம் நரிக்குறவர் இன மக்கள் மனு appeared first on Dinakaran.