- கடலூர்
- ஆட்சியாளர்
- அயப்பன் எம். எல்.
- ஐயப்பன்
- சட்டமன்ற உறுப்பினர்
- சிபி ஆதித்யா செண்டில்குமார்
- மாவட்ட ஆளுநர் மைதானம்
கடலூர், ஜூலை 23: கடலூரில் மாவட்ட ஆட்சியர் அரங்க கூட்டரங்கில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாருடன் கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஆட்சியராக பொறுப்பு ஏற்றதற்கு மரியாதை நிமித்தமாக சந்தித்து ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் கடலூர் மாமன்ற உறுப்பினர் பிரகாஷ், சுமதி ரங்கநாதன், சரத் தினகரன், ராதிகா, பாரூக் அலி, மகேஸ்வரி விஜயகுமார், பிரேம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்பி அகரம் ஞானபிரகாசம், அழகிய நத்தம் முத்துகுமாரசாமி, வரக்கால்பட்டு மனோகர், புதுக்கடை கனகராஜ், காரணப்பட்டு தமிழரசி பிரகாஷ், மருதாடு, கீழ் அழிஞ்சிப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு, நல்லாத்தூர் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் சரவணன், நாராயணன், அழகு, விஜயன், குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எம்எல்ஏவுடன் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் வாயிலாக முழுமைப்படுத்திட கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடலூர் சட்டமன்ற தொகுதி நகரம் மற்றும் கிராமப்புறங்களை கொண்டுள்ள நிலையில் தமிழக அரசு சிறப்பான திட்டங்கள் மூலம் மக்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட மாணவ இளைஞர் சமுதாயத்துக்கான டைட்டல் பார்க், மாசில்லா தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். கெடிலம், பெண்ணையாறு உள்ளிட்ட நீர் நிலை பகுதிகளில் தடுப்பு சுவர் அமைத்து அதற்கேற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்து வெள்ள பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கான நிரந்தர தீர்வுக்கு ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
The post கடலூர் ஆட்சியரை ஐயப்பன் எம்எல்ஏ உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு appeared first on Dinakaran.