×

அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 

கரூர், ஜூலை 23: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் துவங்கி கரூர் மாவட்டம் திருமுக்கூடலு£ரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. இதில், கரூர் மாநகரில் அமராவதி ஆறு ஆண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக திருமுக்கூடலூர் நோக்கிச் செல்கிறது. கரூர் மாநகரின் வழியாக அமராவதி ஆறு பயணிக்கும் நிலையில், மாநகராட்சியின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றங்கரையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, ஆற்றின் தன்மையும் வெகுவாக பாதிப்படை அடைந்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Amaravati river ,Karur ,Karur Corporation ,Amaravati ,Cauvery river ,Tirupur district ,Tirumukodalu ,Dinakaran ,
× RELATED மக்கள்பாதை வழியாக செல்லும்...