×

கார் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி 2 பேர் படுகாயம் போளூர் பைபாஸ் சாலையில்

போளூர், ஜூலை 23: போளூர் பைபாஸ் சாலையில் கார் மோதி பைக்கில் சென்ற தந்தை மற்றும் மகன் பரிதாபமாக இறந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பூக்கார அருணாச்சலம் தெருவில் வசித்து வருபவர் குப்பன்(65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பாலசுப்ரமணி(45). பாமகவில் மாநில இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று தனது சொந்த ஊரான கொரால்பாக்கம் கிராமத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். பைக்கை பாலசுப்ரமணி ஓட்டிவர பின்னால் குப்பன் அமர்ந்து கொண்டு வந்தார். தொடர்ந்து, போளூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்தவர்களது காரை முந்தி செல்ல பாலசுப்பிரமணி முயன்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு பின்னால் வந்த திருவண்ணாமலை தாலுகா, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு(49), நாயுடுமங்கலத்தை சேர்ந்த மாதவன்(45) ஆகியோரது பைக்கும் கார் மீது ேமாதியது. இந்த விபத்தில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மகன் பாலசுப்பிரமணி மற்றும் மற்றொரு பைக்கில் வந்த சேட்டு, மாதவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அப்பகுதி மக்கள் பாலசுப்பிரமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியும் பரிதாபமாக இறந்தார். சேட்டு, மாதவன் ஆகிய இருவரும் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தகவலறிந்த போளூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த குப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ேபாளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் டிரைவரை தேடிவருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கார் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி 2 பேர் படுகாயம் போளூர் பைபாஸ் சாலையில் appeared first on Dinakaran.

Tags : Polur Bypass Road ,Badugayam ,Polur ,Kuppan ,Arunachalam Street, Polur Pookkara, Tiruvannamalai District ,Badugayam Polur bypass road ,Dinakaran ,
× RELATED 261 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை ஒன்றிய...