- மச்சாடு
- தூத்துக்குடி நேருஜி பூங்கா
- தூத்துக்குடி
- மேயர்
- ஜெகன் பெரியசாமி
- மச்சாட்
- நேருஜி பூங்கா
- தூத்துக்குடி மாநகராட்சி கழகம்
- தூத்துக்குடி நேருஜி பூங்கா
தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி நேருஜி பூங்காவில் உள்ள மச்சாது சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதிய பாதை அமைத்து தரப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நேருஜி பூங்காவில் மச்சாது சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாலை அணிவித்து நினைவு கூறுவதற்கு ஏற்ற விதமாக பாதை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேருஜி பூங்காவிற்கு சென்று பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வரும் நாட்களில் மச்சாது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வசதியாக பாதை அமைத்து தரப்படும் என உறுதியளித்தார். அப்போது பரதர் நலச் சங்கத்தின் கேஸ்டோ, ரெனால்டு வில்லவராயர், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி நேருஜி பூங்காவில் மச்சாது சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு புதிய பாதை appeared first on Dinakaran.