சேந்தமங்கலம், ஜூலை 23: கொல்லிமலையில் போலீசார் நடத்திய தீவிர கள்ளச்சாராய வேட்டையில், 500 லிட்டர் சாராய ஊறலை அழித்து, விவசாயி ஒருவரை கைது செய்தனர். கொல்லிமலை ஒன்றியத்தில், கடந்த 2 மாதங்களாக வாழவந்திநாடு செங்கரை போலீசாருடன் இணைந்து, மதுவிலக்கு போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், மதுவிலக்கு ஏடிஎஸ்பி தனராசு தலைமையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், எஸ்ஐக்கள் தியாகராஜன் அம்பிகா மற்றும் போலீசார் வலப்பூர் நாடு, சேலூர் நாடு, குண்டூர் நாடு ஆகிய பகுதிகளில் உள்ள நீரோடைகள் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, குண்டூர் நாடு தெவக்காய்பட்டி வனப்பகுதி அருகே விவசாயி வெங்கடாஜலம் (42) என்பவர், தனது விவசாய நிலத்தில் சாராய ஊறல் போட்டு இருப்பதை போலீசார் சோதனையில் கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசார் வெங்கடாஜலத்தை கைது செய்து, 500 லிட்டர் சாராய ஊறலை அளித்தனர்.
The post 500லி., சாராய ஊறல் அழிப்பு-விவசாயி கைது appeared first on Dinakaran.