×

இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

சென்னை: தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயங்கும் எனவும், இரவு 10.30 மணிக்கு மேல் ரயில்கள் ரத்து செய்யப்படும், எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரையில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது, என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கமான அட்டவணையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் 2.30 மணிவரை மட்டும் ரயில்கள் ரத்து செய்யப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல், 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 11, 11.30, மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே 15 சிறப்பு மின்சார ரயில்களும், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே 7 சிறப்பு மின்சார ரயில்களும், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே 7 சிறப்பு மின்சார ரயில்கள் என மொத்தம் 44 சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல், 14ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
குறிப்பாக, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்படும் சிறப்பு மின்சார ரயில் பல்லாவரம் வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.

கூடுவாஞ்சேரியில் இருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து காலை 10, 10.30, 11, 11.45, மதியம் 12.30, 1, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரயில் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோல், பயணிகள் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அதிகாலையில் இருந்து நள்ளிரவு 11 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை தவிர்த்து கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு 10 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாகவும், பொதுமக்களின் வருகைக்கேற்ப பேருந்துகளின் இயக்கம் மாற்றியமைக்கப்படும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் தற்போது, 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும். பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்படும், என எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் முழுவதும் வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Tambaram ,Railway ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...