×

வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீட்டு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதம் மற்றும் பயிர் சேதத்துக்கு முழுமையான இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருத்தணியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். இதில் காட்டுப்பன்றி, மான், யானை போன்ற காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதம் ஆகியவற்றிக்கு இழப்பிடு வழங்க வேண்டும், காட்டுப்பன்றி சுட அனுமதி வழங்க வேண்டும், விலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு காப்பீடு, மனித உயிரிழப்பிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாபு, ஜெயச்சந்திரன், அப்சல் அகமது பாண்டறவேடு கருணாமூர்த்தி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

The post வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீட்டு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Farmers Union ,Kotakshiar ,Tamil Nadu Farmers' Association ,
× RELATED திருத்தணியில் 25 ஆண்டுகளாக கிராம...