×
Saravana Stores

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சரவணப் பொய்கை குளத்தில் தெப்பம் கட்டும் பணி தொடக்கம்: பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரம்

திருத்தணி: ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சரவணப் பொய்கை திருக்குளத்தில் தெப்பம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் ஆடி கருத்திகை மற்றும் தெப்ப திருவிழா 27ம் தேதி அஸ்வினியுடன் தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஆடி கிருத்திகை திருவிழா 29ம் தேதி அன்று மாலை தொடங்குகிறது சரவணப் பொய்கை குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழாவை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது உற்சவர் வள்ளி, தெய்வானைய சமேத முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.

இந்த விழா தொடங்க நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆடி கிருத்திகை விழாவில் காவடிகளுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகம் ஒருங்கிணைந்து குடிநீர், தூய்மை மற்றும் சுகாதாரம் மின்சாரம், போக்குவரத்து வசதி தங்கும் விடுதிகள் தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் மருத்துவ முகாம்கள், தற்காலிக கழிப்பிடங்கள், பேருந்து நிலையங்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சரவண பொய்கை குளத்தில் தெப்பத் திருவிழாவிற்கான தெப்பம் கட்டும் பணியில் மீனவ சமுதாய மக்கள் நேற்று காலை தொடங்கியுள்ளனர். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வையில் தெப்பம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களில் தெப்பம் கட்டும் பணி நிறைவடையும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

* மருத்துவ முகாம்கள், தற்காலிக கழிப்பிடங்கள், பேருந்து நிலையங்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

The post ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு சரவணப் பொய்கை குளத்தில் தெப்பம் கட்டும் பணி தொடக்கம்: பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Saravana Poigai Pond ,Atadikrutika festival ,Thiruthani ,Saravana Poikai Thirukkulam ,Murugan ,Tiruthani ,Aadi Sathikari and ,festival ,Ashwini ,Saravana Poikai pond ,Aadi Krittikai festival ,
× RELATED திருத்தணி அருகே 2 பேருந்துகள் உரசி...