×

ராக்கெட் ராஜாவின் காரில் சென்ற சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்

நெல்லை: பனங்காட்டு படை கட்சி தலைவரான ராக்கெட் ராஜா, கடந்த வாரம் இரண்டு கொலை மற்றும் பஸ் எரிப்பு வழக்குகளில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்காக அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே ஆனைகுடி பகுதியில் இருந்து ஆதரவாளர்கள் புடை சூழ நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்தார். இதற்காக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். அப்போது திசையன்விளை சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தி (52) நீதிமன்ற பணிக்காக போலீசாருடன் வாகனத்தில் சென்றார். நெல்லை காவல் எல்லையை அடைந்ததும் போலீசார் பாதுகாப்பை அகற்றிய பின்னர், சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தி ராக்கெட் ராஜாவின் காரில் ஏறி கோர்ட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 19ம் தேதி சிறப்பு எஸ்ஐ ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

The post ராக்கெட் ராஜாவின் காரில் சென்ற சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Rocket Raja ,NELLAI ,Panangattu Pada Party ,Nellie ,Anaikudi ,Vektianvilai ,Dinakaran ,
× RELATED சமஸ்கிருதம், இந்தியை திணிக்க கூடாது;...