- சென்னை
- Tiruppuvanam
- சிவகங்கை மாவட்டம்
- திருப்பப்பச்செட்டி
- கருப்பன்னா சாமி
- மாரநாடு கருபசாமி
- சோனை சாமி
- மதுரை அழகர் கோவில்
- திருப்புவனம்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதிகளில், மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி, மாரநாடு கருப்புசாமி, சோணை சாமி போன்ற பல்வேறு கோயில்களுக்கு ஒரு அடி முதல் 21 அடி நீளம் வரையிலான அரிவாள்கள் நேர்த்திக்கடனுக்காக தயாரிக்கப்படுகிறது. தற்போது திருப்புவனத்தில் 18 அடி நீளம், 300 கிலோ எடை கொண்ட அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டறை உரிமையாளர் கூறுகையில், ‘‘இந்த நேர்த்திக்கடன் அரிவாளை சென்னையில் இருந்து வந்த ஒரு பக்தர், ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு காணிக்கையாக செய்ய ஆர்டர் கொடுத்தார். கோயில் முன்பாக அரிவாள் நிலையாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது’’ என்றார்.
The post சென்னை பக்தருக்காக 18 அடி ராட்சத அரிவாள் appeared first on Dinakaran.