×

ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஏற்பாடு

சென்னை: அரசு ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தபடியே, உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேரில் சென்று சமர்ப்பிக்க படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ”இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு குடும்ப ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தபடி உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்ததாக இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தெரிவித்துள்ளது. ஆகவே, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.

The post ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : India Post Payments Bank ,CHENNAI ,Union ,State Government ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு