×

அவிட்டம் திருநாள் மைதானத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையம் அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி அவிட்டம் திருநாள் மகாராஜா காப்பக மைதானத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் வலம்புரிவிளை உரக்கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிவதை கட்டுப்படுத்தும் வகையில், மண்டல வாரியாக குப்பைகள் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் தொழிற்சாலை எரிபொருளாகவும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வடசேரி உள்பட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை அவிட்டம் திருநாள் மகாராஜா காப்பக மைதானத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை அமைக்கும் பணி இன்று காலை தொடங்கப்பட்டது. மேயர் மகேஷ் இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர் நவீன்குமார், திமுக மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் சிதம்பரம், சேக் மீரான், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அவிட்டம் திருநாள் மைதானத்தில் குப்பைகள் மறுசுழற்சி மையம் அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Garbage Recycling Center ,Avitam Thirunal Maidan ,Mayor ,Mahesh ,Nagercoil ,Nagercoil Municipal Corporation ,Avittam Thirunal Maharaja Conservation Ground ,Valampurivilai ,recycling center ,
× RELATED அம்பத்தூரில் கால்வாய்களில் ரோபோடிக்...