×
Saravana Stores

அமர்நாத் குகை லிங்கம் தரிசனம்: 22 நாளில் 3.86 லட்சம் பக்தர்கள் வருகை

நகர்: வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3.86 லட்சம் பக்தர்கள் குகை லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 22 நாள்களைக் கடந்துள்ளது. காஷ்மீரில் இடியுடன் கூடிய மழை இடைவிடாது பெய்து வந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒருநாளில் மட்டும் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலைத் தரிசித்துள்ளனர். இந்த நிலையில், ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 3,471 பேர் அடங்கிய மற்றொரு குழு நேற்று முன்தினம் புறப்பட்டது.

35 வாகனங்களில் 1,073 பேர் பால்டால் அடிவார முகாமிலிருந்தும், 2,398 பேர் அடங்கிய குழு 79 வாகனங்களில் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து புறப்பட்டது. 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 29ம் தேதி அன்று ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகின்றது. கடந்த 22 நாட்களில் அமர்நாத் குகை லிங்கத்தை 3.86 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் 3,113 பக்தர்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு புறப்பட்டதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அமர்நாத் குகையானது, கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமர்நாத் குகை லிங்கம் தரிசனம்: 22 நாளில் 3.86 லட்சம் பக்தர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Amarnath Cave Lingam Darshan ,Nagar ,Amarnath Yatra ,Jammu ,Kashmir ,
× RELATED சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை!