×

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

சென்னை: தாம்பரம் ரயில் நிலைய சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை(23-07-2024) முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலைய சிக்னல் மேம்பாட்டு பணிகளுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவுள்ளதால் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரையில் தினமும் 2,300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

55 மின்சார ரயில்கள் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை சமாளிக்க நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. நாளை முதல் அதிகாலையில் இருந்து நள்ளிரவு 11 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை தவிர்த்து கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு 10 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாகவும், பொதுமக்களின் வருகைக்கேற்ப பேருந்துகளின் இயக்கம் மாற்றியமைக்கப்படும் என்றும் மாநக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்படும். விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும். பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்படும்.

The post சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Tambaram ,Metropolitan Transport Corporation ,Municipal Transport Corporation ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்...