டெல்லி: நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதற்கான எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசிடம் இல்லை என ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்வி வணிகமயமாக்கலை தடுக்கவே நீர் தேர்வை ஒன்றிய அரசு அமல்படுத்தியது என நீர் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.
நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டி நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ நிதி உள்ளிட்டவை பற்றி விவாதிக்க வேண்டும் என நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து இன்று காலை நடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்தும், நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசினர். நீட் முறைகேடு, போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தேர்வுக்கு பதிவு செய்வதில் இருந்து தொடங்கி அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இதனை அடுத்து நீர் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு; நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதற்கான எந்த பரிசீலனையும் ஒன்றிய அரசிடம் இல்லை எனவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கலை தடுக்கவே நீர் தேர்வை ஒன்றிய அரசு அமல்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளது.
The post நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்வதற்கான எந்த பரிசீலனையும் இல்லை: மக்களவை உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.