×

லக்னோ பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள லட்சுமணனின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிகிறது.

இதனால் லக்னோ அணி நிர்வாகம், அவரை தங்கள் பயிற்சியாளர் குழுவில் சேர்க்க ஆர்வமாக உள்ளது. தற்போது பயிற்சியாளராக இருக்கும் ஆஸி.யின் ஜஸ்டின் லாங்கர் அப்பதவியில் நீடிக்கும் நிலையில் லட்சுமணன் ஆலோசகராக செயல்படுவார், என கூறப்படுகிறது.

The post லக்னோ பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,VVS ,Lakshmanan ,Lucknow Supergiants ,IPL ,Lakshmana ,National Cricket Academy ,Lucknow… ,Dinakaran ,
× RELATED பட்டாசுகளை வீட்டில் பதுக்கியதால்...