- பௌர்ணமி கிரிவலம்
- தோரணமலை முருகன் கோவில்
- நெல்லை
- தோரணமலை
- ஸ்ரீ முருகன் கோவில்
- தென்காசி - கடையம் சாலை
- கிரிவலம்
- ஆடி
*ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லை : தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோயிலில் புராண சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் உடையது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி கிரிவலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நோய் நொடியின்றி பக்தர்கள் நலமுடன் வாழ வேண்டும், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதுகாப்புடன் படித்து முடிக்க வேண்டும், பயங்கரவாதம் ஒழிந்து பாரத நாடு வளம் கண்டு உலக அரங்கில் வெற்றி வலம் வர வேண்டும், நாட்டில் நல் மழை பொழிந்து விவசாயம் தழைக்கவும், விவசாயி செழிக்கவும் வேண்டும் என ஸ்ரீ முருகனை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
The post தோரணமலை முருகன் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.