- வண்டலூர்
- அண்ணா
- கவர்னர்
- செங்கல்பட்டு
- வண்டலூர் அறிஞர் அண்ணா மிருகக்காட்சிசாலை
- மாவட்ட ஆளுனர் அலுவலகம்
- தின மலர்
செங்கல்பட்டு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, நீர்யானை, காண்டாமிருகம் போன்ற ஆபத்தான விலங்குகள் மற்றும் யானை, காட்டு மாடு, காட்டு ஆடு, கோழி வகைகள், வாத்து வகைகள், பாம்பு வகைகள், பறவை வகைகள், குரங்கு வகைகள் போன்ற அனைத்து விதமான வன விலங்குகளையும் பராமரிக்கும் வேலைகளில் தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10.7.2024ம் தேதி அன்று விலங்கு பராமரிப்பு மற்றும் அனைத்து வகையான பணிகளையும் செய்யும் தினக்கூலி ஊழியர்களுக்கு தினக்கூலியை நிர்ணயித்து தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 747 ரூபாய் வழங்கி வருவதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகள் பராமரிப்பு மற்றும் அனைத்து வகையான பணிகளையும் செய்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
The post வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.