×

அரியலூர் நீதிமன்றங்களில் ஜூலை 29 முதல் 5 நாட்கள் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

 

அரியலூர், ஜூலை 22: அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில் வருகிற ஜூலை 29ம் தேதி முதல் 5 நாட்களுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளதாவது: பொதுமக்கள்,வழக்காடிகள் பயன்பெறும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை 29 முதல் ஆக.3ம் தேதி வரை நடைபெற உள்ளது.எனவே வழக்காடிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழுவையோ அல்லது 04329-223333 என்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண்ணிலோ மற்றும் 15100 இலவச அழைப்பு எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத்தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம்.கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் நீதிமன்றங்களில் ஜூலை 29 முதல் 5 நாட்கள் சிறப்பு மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Special People's Court ,Ariyalur ,Chief District Judge ,Christopher ,
× RELATED பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு வாகன பிரசாரம்