×
Saravana Stores

சீர்காழி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

 

சீர்காழி, ஜூலை 22: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், கொண்டத்தூர் கிராமம், குருமாணக்குடி கிராமத்தில் முருகன் என்பவருடைய பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் மாவட்ட கலெக்டருக்கு சென்றது. அதன்அடிப்படையில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் தலைமையில் காவல் துறையினரால் பெட்டிக்கடையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொண்டல் கிராமத்தில் முருகனுக்கு சொந்தமான பெட்டி கடையிலும் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது

 

The post சீர்காழி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Murugan ,Kurumanakudy village ,Kondatur village ,Sirkazhi circle ,Mayiladuthurai district ,
× RELATED எதிர்ப்புகள் விலக பலி பீட பூஜை செய்த வைத்திலிங்கம்