×

தினமும் 35 லட்சம் பேர் இலவச பயணம் பெண்களுக்கு தனி வண்ணத்தில் பஸ் குறித்து முதல்வரிடம் பேசி முடிவு: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

அவனியாபுரம்: தமிழகத்தில் 35 லட்சம் பெண்கள் தினமும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கின்றனர். இவர்களுக்கு சிறப்பு பஸ் அல்லது தனி வண்ணத்தில் பஸ் விடுவது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அளித்த பேட்டி:  பேருந்துகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதன்பேரில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படியில் ஆபத்தான நிலையில் செல்லும் மாணவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.   தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தினமும் 35 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். புதுச்சேரியில் பேருந்துகள் குறைவு. கேரளாவில் நான்காயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழகத்தில் பேருந்துகள் சிறப்பாக செயல்படுகிறது. பெண்களுக்கு சிறப்பு பேருந்து அல்லது அவர்களுக்கென தனி வண்ணத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது தவறு. கிராமங்கள் மற்றும் பள்ளி செல்வதற்கென தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post தினமும் 35 லட்சம் பேர் இலவச பயணம் பெண்களுக்கு தனி வண்ணத்தில் பஸ் குறித்து முதல்வரிடம் பேசி முடிவு: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Raja Kannappan ,Avaniyapuram ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...