×

பவுர்ணமியை முன்னிட்டு அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

க.பரமத்தி, ஜூலை 22: பவுர்ணமியை யொட்டி க.பரமத்தி ஊராட்சி அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி சந்தோஷ் நகரில் அஷ்டநாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புபால் ஆகிய 18 வகை பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்து பக்தர்கள் வழிபாடும் தொடர்ந்து பிரசாதம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்

 

The post பவுர்ணமியை முன்னிட்டு அஷ்டநாகேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Ashtanakeshwari ,Amman ,temple ,Paramathi ,Ashtanakeswari Amman Temple ,Paramathi Panchayat ,Ashtanakeswari Amman Siddhar Peeda temple ,Santhosh Nagar ,Paramati Panchayat ,K. Paramati ,Union ,Ashtanakeshwari Amman ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை