×

ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜூலை 22: தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமாநாத் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, கருணாநிதி, அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Electricity Board Retired Parents Welfare Organization ,Sivagangai Power Board Superintending ,Central Organization of Electrical Workers ,State Secretary ,Umanath ,Dinakaran ,
× RELATED நாளை ரேசன் குறைதீர் கூட்டம்