×

தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூலை 22: தமிழ்ச்செம்மல் விருது பெற விணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு ரூ.25000 விருதுத்தொகை, தகுதியுரை வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கு தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப்படிவத்தை http://www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 09.08.2024ம் நாளுக்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும். கூடுதல் விபரங்கள் அறிய 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது உதவி இயக்குநரையோ நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் ஆர்வலர்கள் தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Collector ,Asha Ajith ,Tamil Development Department ,
× RELATED மாஜி விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு