×

பாலக்காடு நகராட்சி பகுதியில் சாலை பள்ளங்களை சீர்படுத்திய காங்கிரஸ் இளைஞரணியினர்

 

பாலக்காடு: பாலக்காடு நகராட்சி பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை காங்கிரஸ் இளைஞரணியினர் சீர்படுத்தி செப்பனிட்டனர். பாலக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பாலக்காடு கோழிக்கோடு தேசிய சாலையில் சந்திர நகர் சாலை சந்திப்பு பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனை பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மண்டல தலைவர் சதீஷ் தலைமையில் காங்கிரஸ் இளைஞரணியினர் கான்கிரீட் கட்டை தூள்கள் மூலமாக அடைத்து சாலைகளை சீர்படுத்தினர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாலக்காடு நகராட்சிக்கு உட்பட்ட சந்திர நகர், கல் மண்டபம் ஆகிய இடங்கள் உட்பட பல பகுதிகளிலும் சாலைகள் பழுதடைந்தது. இவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்யாமல் உள்ளதால் இப்பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது. இதனை சீர்செய்து விபத்துகளை தடுக்கும் பணியில் மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணியினர் போர்க்கால நடவடிக்கையில் பள்ளங்களை மூடி சாலைகளை செப்பனிட்டனர். இந்த பணிகளில் மாவட்ட காங்கிரஸ் இளைஞரணியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் பஷீர், பிரசோத், நவாஸ், சக்கீர், தீபக் சேதுமாதவன், சந்திரசேகரன், அப்ஷல், அப்ரீத், ரிஷான் ஆகியோர் உட்பட இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

The post பாலக்காடு நகராட்சி பகுதியில் சாலை பள்ளங்களை சீர்படுத்திய காங்கிரஸ் இளைஞரணியினர் appeared first on Dinakaran.

Tags : Congress ,Palakkad ,Chandra Nagar Road ,Palakkad Kozhikodu National Road ,Palakkad Municipality ,Palakkad Assembly Constituency ,Dinakaran ,
× RELATED முன்னாள் காஞ்சிபுரம் எம்பி...