×
Saravana Stores

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் சர்மா ஒலி வெற்றி: 188 பேர் ஆதரவு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெற்றி பெற்றார்.நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து புஷ்ப கமல் தஹல் பிரசாந்தா தலைமையிலான சிபிஎன் மாவோயிஸ்டு ஆட்சி கவிழ்ந்தது. புதிய கூட்டணியுடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பி.சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். அந்நாட்டின் அரசியலமைப்பு படி 30 நாட்களுக்குள் புதிய பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதன்படி, நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மொத்தமுள்ள 263 உறுப்பினர்களில் 188 பேர் ஒலிக்கு ஆதரவாக வாக்களித்ததால் வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 138 வாக்குகளே போதுமான நிலையில், மொத்த எம்பிக்களில் 3ல் 2 பங்கு ஆதரவை ஒலி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக 74 வாக்குகள் பதிவாகின.

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் சர்மா ஒலி வெற்றி: 188 பேர் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : SHARMA SOUND WINS ,Kathmandu ,K. B. Sharma ,Sound ,CPN ,Maoist ,Pushpa Kamal Tahal Prasanta ,Communist Party of Nepal ,Nepal ,PM ,Sharma ,Dinakaran ,
× RELATED நேபாள மலையில் மாயமான 5 ரஷ்ய மலையேற்ற...