×

நார்டியா ஓபன் டென்னிஸ் போர்ஜஸ் சாம்பியன்: பைனலில் நடாலை வீழ்த்தினார்

பஸ்டாட்: ஸ்வீடனில் நடந்த நார்டியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஜஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் (38 வயது, 261வது ரேங்க்) நேற்று மோதிய போர்ஜஸ் (27 வயது, 51வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

 

The post நார்டியா ஓபன் டென்னிஸ் போர்ஜஸ் சாம்பியன்: பைனலில் நடாலை வீழ்த்தினார் appeared first on Dinakaran.

Tags : Nordea Open Tennis ,Nadal ,Portugal ,Nuno Borges ,Nordea Open ,Sweden ,Borges ,Rafael Nadal ,Dinakaran ,
× RELATED வலைதளத்தில் ரொனால்டோவுக்கு 100 கோடி ஃபாலோயர்கள்